சங்கராபுரம் அருகே மதுபாட்டில்கள், சாராயம் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே மதுபாட்டில்கள், சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-27 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சங்கராபுரம், மோட்டாம்பட்டி பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சங்கராபுரம் பூட்டை சாலையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, அதேபகுதியை சேர்ந்த சிவா (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மோட்டாம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்த அதேஊரை சேர்ந்த விஜயகாந்த் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்