கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

ரிஷிவந்தியம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.;

Update:2022-12-22 00:15 IST
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார், காட்டு எடையாா் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மகன் சிவக்குமார் (வயது 20), பழனி மகன் அரவிந்த் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்