சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
சிங்கம்புணரி அருகே சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மஷம்வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து நேற்று முன்தினம் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் போலீசில் புகார் செய்தார்.இதன் அடிப்படையில் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக சிங்கம்புணரி வடக்கு வேளார் தெருவை சேர்ந்த கவின் (வயது 21), அவரது நண்பர் சேதுபதி (21) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்ததில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.