கஞ்சா கடத்தி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது

காட்பாடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-03 16:49 GMT

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் அருண் ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 4 கிலோ கஞ்சாவை திருப்பூருக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசோக் மஜிந்தார் (வயது 24), பிஸ்வஜித் மந்தர் (23) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்