கோபி அருகே பிறந்து 2 மாதமான குழந்தை மீட்பு

பிறந்து 2 மாதமான குழந்தை மீட்பு

Update: 2022-06-28 20:06 GMT

கோபிசெட்டிபாளையம் தாலுகா கடத்தூர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தாய் மூலம் கைவிடப்பட்ட பிறந்து 2 மாதங்களான ஆண் குழந்தை மீட்கப்பட்டது. இந்த குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு, குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை தத்து மையத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது. எனவே, இந்த குழந்தைக்கு யாராவது உரிமை உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் ஒரு மாதத்துக்குள் ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள முன்னாள் படைவீரர் மாளிகையில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். குழந்தை தொடர்பான ஆட்சேபனை தெரிவிக்கப்படாத பட்சத்தில் 'சி.ஏ.ஆர்.ஏ.' என்ற 'சென்டிரல் அடாப்ஷன் ரிசோர்ஸ் அதாரிட்டி' என்ற இணைய தளத்தில் குழந்தை தத்து கேட்டு விண்ணப்பித்து உள்ள பெற்றோருக்கு தத்து கொடுக்கப்படும்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்