காட்டுயானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வருகை
பந்தலூர் அருகே, ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் காட்டுயானை தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். அங்கு நுழையும் காட்டுயானைகளை கும்கி யானைகள் உதவியுடன் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருணா உறுதி அளித்தார். அதன்படி நேற்று முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு முகாமில் இருந்து விஜய், வசீம் ஆகிய 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, அங்குள்ள சிங்கோனா பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
அங்கு சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர்கள் குணசேகரன், வெள்ளிங்கிரி, ஞானமூர்த்தி மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் கும்கி யானைகள் உதவியுடன் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உள்ளனர்.