ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்ஹவுராவில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 6.50 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரெயிலில் தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது, பொது பெட்டியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ கஞ்சா மற்றும் 900 கிராம் எடைகொண்ட கஞ்சா எண்ணெய் இருந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷீசிரியா குமார்கிரி என்பவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா, கஞ்சா எண்ணெயை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இந்த தகவலை திருச்சி சரக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.