கல்லூரி பஸ் மோதி 2 பேர் படுகாயம்

உப்பிலியபுரம் அருகே கல்லூரி பஸ் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-11 16:52 GMT

தொட்டியத்தை அடுத்த ஏளூர்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 39). இவர் மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் கொண்டையம்பள்ளியில் உள்ள மாமானார் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தார். உப்பிலியபுரத்தை அடுத்த மங்கப்பட்டி அருகே எதிரே வந்த புத்தனாம்பட்டி நேரு நினைவு கலை அறிவியல் கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி, அவரது மாமனார் ராமலிங்கம் (57) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார், கல்லூரி பஸ் டிரைவர் சேலம் நாகியம்பட்டியை சேர்ந்த தங்கவேலு (47) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்