பஸ் மோதி 2 பேர் படுகாயம்

பஸ் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-03 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே பிரான்மலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக், வினோத்குமார். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பொன்னமராவதி சென்று பிரான்மலை திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக், வினோத்குமார் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்