துவாக்குடி நகராட்சி கூட்டத்தில் 2 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

துவாக்குடி நகராட்சி கூட்டத்தில் 2 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-16 19:10 GMT

துவாக்குடி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் காயம்பு தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் பட்டுசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை படித்துக் காட்டாமல் எண்களை மட்டும் குறிப்பிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி 21-வது வார்டு அ.ம.மு.க. கவுன்சிலர் ராஜா, 19-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் பொன் சரஸ்வதி ஆகியோர் அஜந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களை தி.மு.க. கவுன்சிலர் கதிரவன் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து கவுன்சிலர்கள் ராஜா, பொன் சரஸ்வதி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. தகவல் அறிந்த துவாக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கமலவேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால்அவர்கள் கலைந்துசென்றனர். இது குறித்து கவுன்சிலர் ராஜா கூறும்போது, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய போலீசார் இன்றுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்