திருட்டு வழக்கில் 2 பேர் கைது

ஆலங்குளம் அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-01-06 00:15 IST

ஆலங்குளம்:

ஆலங்குளம்-புதுப்பட்டி சாலையில் ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சிவலார்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் (வயது 41), பண்ணையார் (40) என்பதும், உடையாம்புளி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் மருந்து தெளிக்க பயன்படுத்தும் ஸ்பிரேயரை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்