செல்போன் பறித்த 2 பேர் கைது

செல்போன் பறித்த 2 பேர் கைது

Update: 2022-09-24 20:19 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 46). மதுரை வந்த அவர் பெரியார் பஸ்நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த செல்போனை அருகில் நின்றவர் திருடி சென்றதை பார்த்து விட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்திய போது வாடிப்பட்டி அருகே உள்ள கல்லனையை சேர்ந்த செல்வம் (55) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அதேபோன்று மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஐராவதநல்லூரை சேர்ந்த அழகர்சாமி(47) என்பவரிடம் ஒருவர் செல்போனை திருடினார். அவரை மாட்டுத்தாவணி போலீசார் பிடித்து விசாரித்தபோது தெப்பக்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (45) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்