ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பாவூர்சத்திரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கீழப்பாவூர் கருமடையூர் தெருவில் சுந்தர் என்பவர் வீட்டின் முன்பு 7 மூட்டைகளில் 280 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது நெல்லை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் 5 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திம்மராஜபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.