கூலித்தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு-2 பேர் கைது

வடக்கு விஜயநாராயணத்தில் கூலித்தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-14 20:23 GMT

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து (வயது 40). ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் மகன் இசக்கி (வயது 40), இசக்கிமுத்து மகன் சுரேஷ் (வயது 30).இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளிகள்.இந்நிலையில் பேச்சிமுத்து மகளை மாற்றுத்திறனாளி ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தாராம்.

இதுகுறித்து இசக்கி, சுரேஷ் ஆகியோர் பேச்சிமுத்துவை கேலி பேசியதாக கூறப்படுகிறது. இதை பேச்சிமுத்து கண்டித்ததால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு பேச்சிமுத்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தபோது இசக்கி, சுரேஷ் ஆகியோர் வழிமறித்து அரிவாளால் பேச்சிமுத்துவை வெட்டியுள்ளனர். இதில் பேச்சிமுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் தப்பி செல்ல முயன்ற இசக்கி, சுரேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்