திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை ரெயில்வே கேட் அருகே கஞ்சா விற்பதாக திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த கவி பாலாஜி (வயது 23), முத்து விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த விக்கி (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 240 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.