தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

கோவில் திருவிழாவில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-28 15:13 GMT

கொடைரோடு அருகே உள்ள பொம்மணம்பட்டியில் காளி பகவதியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, பொம்மணம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர்கணேஷ் (வயது 40) என்பவர் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த நிதி ஜீவா (25), கருப்புச்சாமி (வயது 26) கார்த்திக் ஆகியோர் சங்கர்கணேஷிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அவர்கள் இடையூறு செய்ததாகவும் தெரிகிறது.

இதற்கிடையே காயம் அடைந்த சங்கர்கணேஷ் சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதி ஜீவா, கருப்புசாமி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்