பணம் வைத்து சூதாடிய 19 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-29 19:38 GMT

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் சிறப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதேபோன்று அதே பகுதியில் அந்த மண்டபத்தின் இன்னொரு பகுதியில் சூதாடிக்கொண்டிருந்த மேலும் 10 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்