186 விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவையில் ஊர்வலமாக கொண்டு சென்று 186 விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன.

Update: 2022-09-02 15:02 GMT

கோவையில் ஊர்வலமாக கொண்டு சென்று 186 விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகரில் உள்ள விநாயகர் கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட் டன. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

கோவை மாநகரில் இந்து முன்னனி சார்பில் 308 விநாயகர் சிலைகளும், இந்து மக்கள் கட்சி (தமிழகம்) 120, பாரத்சேனா 40 மற்றும் இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் மொத்தம் 538 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.

சிலை வைத்து வழிபாடு

இதுபோன்று புறநகர் பகுதிகளில் 1,556 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,094 சிலைகள் வைக்கப்பட்டன. இது தவிர பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

இந்த விநாயகர் சிலைகள் குறிச்சிகுளம், சிங்காநல்லூர்குளம், முத்தண்ணன் குளம் மற்றும் குனியமுத்தூர், போத்தனூர் பகுதியில் உள்ள குளங்களிலும், புறநகர் பகுதிகளில் உள்ள சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள், ஆறுகளிலும் கரைக்கப்பட உள்ளன.

186 சிலைகள் கரைப்பு

இதில் முதல்கட்டமாக கோவை குனியமுத்தூர், போத்தனூர், சுந்தரா புரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 186 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் இந்து அமைப்பினர் உற்சாகமாக மேளதாளம் முழங்க சிலைகளை கொண்டு வந்தனர்.

இதையடுத்து விநாயகர் சிலைகள் சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம் உள்ளிட்ட குளங்களில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பாதுகாப்பு

இதற்காக விநாயகர் சிலைகள் வாகனங்களில் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அவ்வாறு எடுத்து வரப்பட்ட சிலைகளுக்கு கரைக்கும் இடத்தில் பூஜை செய்யப்பட்டது. இதை யடுத்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட னர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 186 சிலைககள் நேற்று கரைக்கப்பட்டன.

நாளை ஊர்வலம்

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் உற்சாகத்துடன் நடைபெற்றது.

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கோவை மாநகரில் மீதமுள்ள விநாயகர் சிலைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்