தமிழகத்தில் 1,846 பேருக்கு கொரோனா 11-வது நாளாக குறைவு

தமிழகத்தில் 11-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 1,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-07-26 23:02 GMT

சென்னை,

நேற்று புதிதாக 25 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,082 ஆண்கள், 764 பெண்கள் என 1,846 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 409 பேர், செங்கல்பட்டில் 194 பேர், கோவையில் 176 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 79 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 291 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

2,225 பேர் 'டிஸ்சார்ஜ்'

இதுவரை 38 ஆயிரத்து 32 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 760 பேரும், செங்கல்பட்டில் 1,596 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று 2,225 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 83 ஆயிரத்து 346 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்