1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: மினிவேன் டிரைவர் கைது

1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: மினிவேன் டிரைவர் கைது;

Update:2022-11-17 03:21 IST


மதுரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆரப்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் மூடை, மூடையாக ரேஷன் அரிசி இருப்பதை கண்டனர். பின்னர் வேன் டிரைவரை பிடித்து விசாரித்த போது, காமராஜர் சாலையை சேர்ந்த அருண்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். மேலும் 36 மூடைகளில் இருந்த 1,800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் பிரபு என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்