மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 18 கடைகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 18 கடைகள் அதிகாரிகளின் முன்னிலையில் அகற்றப்பட்டது.;
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்குவதற்காக அம்மன், சுவாமி சன்னதிகளில் ஏராளமான கடைகள் இருந்தன. இந்தநிலையில் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டதை காரணம் காட்டி, அங்கிருந்த 54 கடைகள் அகற்றப்பட்டன.
இதற்கிடையே, கோர்ட்டில் வழக்கு நடந்ததால், 12 பேருக்கு சொந்தமான கடைகள் அன்றைய தினத்தில் அகற்றப்படவில்லை. இதனை தொடர்ந்து கோர்ட்டு, 12 பேருக்கு சொந்தமான 18 கடைகளை அகற்ற ஜூலை மாதம் 15-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கியது. கால அவகாசம் முடிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் அந்த கடைகளும் இன்று அகற்றப்பட்டன.