17 ஏட்டுகள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு

17 ஏட்டுகள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Update: 2022-11-07 18:55 GMT

கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 17 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சங்கர் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), இளங்கோ (திமிரி), மணி (வழைப்பந்தல்), வேலுமணி (மது விலக்குஅமலாக்கப்பிரிவு), தியாகராஜன் (ராணிப்பேட்டை), பழனிவேல் (திமிரி), சுரேஷ் பாபு (ஆற்காடு டவுன்), வெங்கடேசன் (நெமிலி), துரைவேலன் (அரக்கோணம் தாலுகா), செல்வம் (திமிரி) கவிதா, சித்ரா (ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்), புஷ்பா, வரலட்சுமி (ராணிப்பேட்டை போலீஸ் நிலையம்), செல்வி (நெமிலி), ஜான்சிராணி (அரக்கோணம்)் ஜோதி (அவளூர்), ஆகிய 17 போலீஸ் ஏட்டுகளும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றனர்.

அவர்கள் அனைவரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் (தலைமையிடம்) விஸ்வேஸ்வரய்யா, (இணையவழி குற்றப் பிரிவு) முத்துக்கருப்பன், மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்