ஆடி அமாவாசை: குமரி மாவட்டத்தில் வருகிற 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஶ்ரீதர் அறிவித்துள்ளார்.

Update: 2023-08-07 14:49 GMT

கோப்புப்படம்

கன்னியாகுமரி,

ஆடி அமாவாசை அன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களின் நினைவாக பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதம் பல ஆண்டுகளுக்கு பிறகு 2 அமாவாசையாக வருகிறது. அதாவது கடந்த ஜூலை 17-ந்தேதி அமாவாசையுடன் ஆடி மாதம் பிறந்தது. அதே போல் வருகிற ஆடி 31-ந் தேதி (ஆகஸ்ட் 16) மற்றொரு அமாவாசையும் வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஶ்ரீதர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சி நடத்தும் வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்