16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; வாலிபர் கைது

உசிலம்பட்டியில் 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-13 20:22 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து இருசக்கர வாகன திருட்டுகள் அரங்கேறியது. இது தொடர்பாக உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு நல்லு தலைமையிலான தனிப்படையினர் வாகன திருடர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் எழுமலை அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த ராஜபாண்டி என்ற சின்ன கோட்ஷா(வயது 22) என்பதும், பல இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்