கஞ்சா விற்ற 16 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-06 17:43 GMT

 போலீசார் கண்காணிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து சென்ற கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகில் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த மாதிநாயனப்பள்ளியை சேர்ந்த சுமா (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல கஞ்சா பதுக்கி வைத்திருந்த கொம்பாரகரையை சேர்ந்த அகேஷ் (19), லிங்கம்பட்டி ஆனந்த் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா பறிமுதல்

தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் சூடானூர் சந்திரன் (27), கிருஷ்ணகிரி பாரதியார் நகர் சேது என்கிற வெங்கட்ராமன் (28), காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெரு தினேஷ் (20), ஓசூர் மணிகண்டன் (33), பாளையம் சைத்ரா (32), கோபி (40), காமகவுண்டனூர் பவுனம்மாள் (60), வேலம்பட்டி கார்த்திக் (21), ஜெகதேவி தேவபிரகேசா (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ஊத்தங்கரை ரெட்டிப்பட்டி வாசகி (45), கீழ்மத்தூர் ராஜா (60), ஆனந்தூர் ஆசீப் (25), வெள்ளவள்ளி வேலு (52) ஆகிேயாரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்றதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்