துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை
துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவத்தின் முக்கிய திருவிழாவான கடை முகத்தீர்த்தவாரி விழா 16-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 16-ந்தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. ஆனால் மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.