சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 15-ந் தேதி விடுமுறை

சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 15-ந் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

Update: 2022-08-12 19:10 GMT

புதுக்கோட்டையில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், எப்.எல். 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் சுதந்திர தினமான வருகிற 15-ந்தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று மேற்படி டாஸ்மாக் கடைகளும் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்களும், தனியார் மதுபான கூடங்களும் செயல்படாது என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்