154-வது பிறந்தநாள்: காந்தி சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

காந்தியின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2022-10-02 23:45 GMT

சென்னை,

காந்தியின் 154-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அதன் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் உருவப்படமும் வைக்கப்பட்டு இருந்தது. அந்த உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஆர்.காந்தி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் தா.வேலு, பரந்தாமன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியினர்

இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., கே.வி.தங்கபாலு, மாநில துணைத்தலைவர் கோபண்ணா, அசன் மவுலானா எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் வீரபாண்டியன், திரவியம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், வழக்கறிஞர் அணி மாநில தலைவர் வேல்முருகன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இவர்களுடன் எஸ்.ஆர்.எஸ்.சர்வோதய பெண்கள் விடுதி மாணவிகள் காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்