வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள்: வருகிற 5-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Update: 2024-08-29 09:10 GMT

சென்னை,

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்த 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153-வது பிறந்தநாளான 5.9.2024 (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு அ.தி.மு.க. சார்பில், என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., பா.வளர்மதி, ப.மோகன், எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன், என்.சின்னத்துரை, எஸ்.சரவணபெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ., தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் இணைந்து, மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்