15 வயது சிறுமி கர்ப்பம்; போலீசார் விசாரணை

15 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-07-30 01:09 IST

சேலத்தை சேர்ந்த கர்ப்பம் அடைந்த சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் தடுப்பூசி அட்டை வாங்குவதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அவருடைய ஆதார் அட்டையை வாங்கி பார்த்தனர். இதில் 8 மாத கர்ப்பிணியான அந்த சிறுமிக்கு 15 வயது என்பது தெரியவந்தது. இதுகுறித்து சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சிறுமி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்