கட்டணம் செலுத்தாததால் 15 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
குழித்துறை பகுதிகளில் கட்டணம் செலுத்தாததால் 15 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
குழித்துறை:
குழித்துறை பகுதிகளில் கட்டணம் செலுத்தாததால் 15 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீர் கட்டணம், வாடகை கட்டணங்கள், தொழில் வரி போன்றவற்றை செலுத்தாமல் உள்ளவர்கள் உடனடியாக செலுத்துமாறு நகராட்சி சார்பில் வார்டுதோறும் வாகன பிரசாரம் மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சி பணியாளர்கள் வீடுகளுக்குளள சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் விவரங்களை தெரிவித்து கட்டணங்கள் வசூலித்து வருகிறார்கள். வீட்டு வரிகள் செலுத்தாத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு முயற்சிகள் மேற்கொண்டும் குடிநீர் இணைப்புகளுக்கான கட்டணம் நீண்ட நாட்களாக செலுத்தாத 15 குடிநீர் இணைப்புகளை துண்டித்து நகராட்சி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆணையாளர் ராம திலகம் அறிவுரைப்படி ஆய்வாளர் செந்தில்குமார், குடிநீர் பிரிவு மேற்பார்வையாளர் தாணுமாலயன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் இந்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கிகளை உடனே செலுத்துமாறு நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.