கேரளாவுக்கு கடத்த முயன்ற 140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

Update: 2022-07-16 15:00 GMT

கொல்லங்கோடு, 

நித்திரவிளை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீசார் காஞ்சாம்புறம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது பிளாஸ்டிக் கேன்களில் 140 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த மண்எண்ணெய் இனயத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது ெதரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த ஆட்டோவை மண்எண்ணெயுடன் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்