திருச்சி விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2023-03-01 19:04 GMT

திருச்சி விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதைதடுக்க சுங்கத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் தங்கம் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் திருச்சி விமான நிலைய போலீசார் விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சிலர் அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.

இதில் நாகப்பட்டினம் புது தெரு பகுதியைச் சேர்ந்த முகமது மொய்தீன் ஷா (வயது 23), திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த ஜமீல் அல்கத் பீனா (28), ஸ்ரீரங்கம் தாலுகா கிள்ளிக்கூடு பகுதியை சேர்ந்த சிராஜுதீன் (27) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

பறிமுதல்

மேலும், அவர்கள் எந்தவித ஆவணம் இன்றி தங்க நகைகள் வைத்திருந்தது தெரியவந்தது.. இதில் முகமது மொய்தீன் ஷாவிடம் இருந்து 91 கிராம் தங்க சங்கிலி, ஜமீல் அல்கத் பீனாவிடம் இருந்து 75 கிராம் தங்க சங்கிலி, சிராஜுதீனிடம் இருந்து 113 கிராம் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். பின்னர் பிடிபட்டவர்களை விடுவித்து உரிய ஆவணங்களை சமர்பித்து நகைகளை பெற்று செல்லுமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்