14 அரசு பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

14 அரசு பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது.

Update: 2022-06-20 21:42 GMT

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 224 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இதில் 85 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்தன. அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை 14 அரசு பள்ளிக்கூடங்களில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ-மாணவிகளும் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர். இவ்வாறு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிக்கூடங்களின் விவரம் வருமாறு:-

1.வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி.

2.கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி.

3.சாலைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி.

4.வெள்ளோட்டாம்பரப்பு அரசு மேல்நிலைப்பள்ளி.

5.சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

6.மாத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி.

7.ஓடத்துறை எஸ்.எம்.அரசு மேல்நிலைப்பள்ளி.

8.திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.

9.பசுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.

10.சீனாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி.

11.துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி.

12.பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி.

13.தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.

14.புஞ்சைபுளியம்பட்டி கே.ஓ.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

மேற்கண்ட 14 பள்ளிக்கூடங்களிலும் 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்