சின்னசேலத்துக்கு 1,304 டன் உரங்கள் வரத்து

தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 1,304 டன் உரங்கள் வரத்து;

Update:2023-02-19 00:15 IST

சின்னசேலம்

நடப்பு பருவத்துக்கு தேவையான 422 டன் யூரியா 438 டன் டி.ஏ.பி., 444 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் ஆயிரத்து 304 டன் உர மூட்டைகள் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில்மூலம் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் இந்த ஊரமூட்டைகளில் 301 டன் யூரியா, 319 டன் காம்ப்ளக்ஸ், 313 டன் டி.ஏ.பி. உர மூட்டைகள் கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டத்துக்கு 16 டன் யூரியா, 17 டன் காம்ப்ளக்ஸ், 17 டன் டி.ஏ.பி. உர மூட்டைகள், பெரம்பலூர் மாவட்டத்துக்கு 106 டன் யூரியா, 108 டன் காம்ப்ளக்ஸ், 108 டன் டி.ஏ.பி. உர மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) விஜயராகவன், வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம், உதவி இயக்குனர்(தரக் கட்டுப்பாடு) அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் கூறும்போது, தற்போது விவசாய தேவைகளுக்காக 3,529 டன் யூரியா, 2,280 டன் டி.ஏ.பி.யும், 1,307 டன் பொட்டாஷ், 927 டன்சூப்பர் பாஸ்பேட், 7,327 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது. எனவே விவசாயிகள் தேவையான அளவு உரங்களை வாங்கி பயன்பெறலாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்