பாலியல் பலாத்கார வழக்கில் 13 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது

பாலியல் பலாத்கார வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-21 18:16 GMT

கொல்லங்கோடு, 

பாலியல் பலாத்கார வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கைது

கொல்லங்கோடு அருகே உள்ள குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் சசி (வயது40), தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது ஊரில் உள்ள ஒரு பெண்ணிடம் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் விடுமுறையில் ஊருக்கு வந்து அந்த பெண்ணை திருமணம் செய்வதாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சசிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கடந்த 2008-ம் ஆண்டு குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சசியை தேடி வந்தனர். இதற்கிடையே சசி தலைமறைவானார். அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, சசி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.இந்தநிலையில் குளப்புறத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சசி வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் அங்கு விரைந்து சென்று சசியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்