தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 13 பேர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 13 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-07 10:37 GMT

தாம்பரம் மாநகர போலீஸ் கூடுவாஞ்சேரி சரகத்திற்கு உட்பட்ட ஒட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீஸ் நிலைய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 13 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஒட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்