டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 12 ஆசிரியர்கள் தேர்வு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-09-03 18:52 GMT

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி காட்டுமலையனூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயப்பிரியா, கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பிரசன்னா, அல்லியந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன், சூசைநகர் நிர்மல மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் லில்லி, செங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசு, தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஞானவேல், அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எப்சிபா மலர்விழி, பெருங்காட்டுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சாமுவேல் ராஜா, மேற்கு ஆரணி ஒன்றியம் வண்ணாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கீதா, வந்தவாசி ஒன்றிய கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரஷீனா, வெம்பாக்கம் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன், தண்டராம்பட்டு ஒன்றியம் மல்லிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை ஆகிய 12 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள 12 ஆசிரியர்களையும் பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்