மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 12 பேர் காயம்

மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 12 பேர் காயம் அடைந்தனர்.;

Update:2023-02-05 00:12 IST

மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 12 பேர் காயம் அடைந்தனர்.

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பள்ளத்தூரில் காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது. இதனையொட்டி ஓடுபாதையின் இருபுறங்களிலும் சவுக்குக் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்து இருந்தனர். விழாவை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நல அலுவலர் சுமதி, தாசில்தார் அ.கீதா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சீறிப்பாய்ந்து ஓடுபாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகள் ஓடும்போது அவற்றிற்கு துணையாக விடப்பட்ட ஒரு பசுமாடு பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. 4 மாடுகளுக்கு காயம் ஏற்பட்டது. 1 காளை கிணற்றில் விழுந்தது. அதை தீயணைப்பு அதிகாரிகள் உயிருடன் மீட்டனர்.

குறைந்த ரேத்தில் இலக்கிைன அடைந்து ஓடிய காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 111, இரண்டாம் பரிசாக ரூ.81 ஆயிரத்து 111, மூன்றாம் பரிசாக ரூ.65 ஆயிரம் உள்பட தென்னங்கன்றுகளடன் மொத்தம் 55 பரிசுகள் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. காட்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனர்.

விழா ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்