பஸ்சில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

பஸ்சில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-24 16:33 GMT

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் வேலூர் மாவட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் காட்பாடி போலீசார் ஆந்திராவில் இருந்து வந்த பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது திருப்பதியில் இருந்து கடலூர் நோக்கி வந்த பஸ்சில் போலீசார் சோதனை செய்த போது சந்தேகப்படும் வகையில் 2 வாலிபர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.

அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது 25), நாமக்கல்லை சேர்ந்த வினோத் (26) என்றும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்