'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாள் - தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

Update: 2022-09-27 04:28 GMT

சென்னை,

'தமிழர் தந்தை' என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்