இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறையானது 1,100 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்திருந்தது.

Update: 2023-11-24 06:18 GMT

சென்னை, 

சட்டசபையில் 1,100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. இதில் 2021-2022 - ல் 500 ஜோடிகளுக்கு, 2023-ல் 600 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்த ஆண்டில் 598 ஜோடிகளுக்கு ஏற்கனவே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீதம் உள்ள 2 ஜோடிகளுக்கு இன்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த திருமணம் மயிலாப்பூரில் உள்ள கற்பகம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார்.

இதில் மணமக்களுக்கு 4 கிராம் தங்க தாலி மற்றும் கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட 31 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்