வீடு புகுந்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு
ஆனந்தூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூரை சேர்ந்தவர் அப்துல்ரகீம்(வயது 65). இவருடைய மனைவி காத்தூன்பீவி(60). இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் இவரதுவீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்த 2 கொள்ளையர்கள் தூங்கி கொண்டிருந்த காத்தூன்பீவி அணிந்திருந்த 11 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றார்.