ஆனைமலை
ஆனைமலையை அடுத்த ஒடையகுளம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் அதே பகுதியை சேர்ந்த திருமலைசாமி(வயது 69), சுரேஷ்(54), ராமசாமி(54), செந்தில்குமார்(50), ரத்னசாமி(64), லோகநாதன்(60), தங்கராஜ்(61), பழனிச்சாமி(49), கதிர்வேல்(40), செல்வராஜ்(44), பாலுசாமி (54) ஆகிய 11 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 32 சீட்டு கட்டுகள், ரூ.3 ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டது.