108 ஆம்புலன்ஸ் பணியாளர் தற்கொலை

தேனி அருகே பணியிட மாற்றம் கிடைக்காததால் விரக்தியில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-10-27 04:30 IST

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி அண்ணா 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). இவர், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் மதுரையில் இருந்து தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் வேண்டி காத்திருந்தார். ஆனால், சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் கிடைக்காத விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 4 மாதங்களாக பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தம்பி லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்