1008 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் உலக மக்கள் நன்மைக்காகவும், உலக மக்களை மிகவும் அச்சுறுத்திவரும் கொரோனா நோயில் இருந்து நாட்டு மக்கள் முற்றிலுமாக விடுபட்டு அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும், தொழில் வளம் பெறுகவும், நாட்டில் ஒற்றுமை ஓங்கவும், மழைவளம் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டியும், 1008 சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்து. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி பஜனை பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்துராஜன், செயலாளர் ஆறுமுக பாண்டி, பொருளாளர் ஐகோர்ட் துரை, கொடை விழா தலைவர் முருகேசன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் காமராஜர் நற்பணி இயக்கத்தினர் செய்திருந்தனர்.