வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,௦௦௮ சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1,008 சங்காபிஷேகம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து, சங்குகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பின்பு புனித நீர் அடங்கிய கலசங்கள், சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.