ரத்தினகிரி பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில் 1008 பால்குட ஊர்வலம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில் 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.
ஆற்காடு
ரத்தினகிரி பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில் 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.
ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மலையடிவாரத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அறுங்கோண தெப்ப குளத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், பாலமுருகன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா மற்றும் பங்குனி உத்தரத்தையொட்டி 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் விக்னேஷ்வரர் பூஜையும், பால்குடம் நிறுவுதல், சத்ருசம்ஹாரசுப்பிரமணிய திருசதிஹோமம், பூர்ணாஹீதி, மஹாதீபாரதனையும் நடந்தது.
இதனையொட்டி மலையடிவாரத்தில் இருந்து கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருனடிமை சுவாமிகள் தலைமையில் 1008 பால்குட ஊர்வலம நடந்தது.
விழாவில் கலவை சச்சிதானந்தசுவாமிகள், உபயதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
=========