100 நாள் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

100 நாள் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-19 18:01 GMT

அரிமளம் ஊராட்சி ஒன்றியம், செங்கீரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், வேலைக்கு வரும் நபர்களை 10 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து ஒரு நாளைக்கு 2 முறை அவர்களை புகைப்படம் எடுத்து ஆன்லைன் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியது பணித்தள பொறுப்பாளரின் வேலை. அவ்வாறு அனுப்பும் பொழுது சில நேரங்களில் புகைப்படம் அப்லோடு ஆகாமல் வலைதள இணைப்பு துண்டித்து விடுகிறது. இதனால் 2 முறை புகைப்படம் சென்ற நபர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கி உள்ளனர். ஆனால் மண்வெட்டு பணியில் ஈடுபட்ட செங்கீரை ஊராட்சி பொதுமக்கள் 6 நாட்கள் வேலை செய்தார்கள். அதில் 3 நாட்கள் மட்டுமே ஒன்றியத்தில் சம்பளம் ஏற்றியுள்ளனர். இதையடுத்து பணியில் இருந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்துவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பணியாற்றிய அனைத்து நாட்களும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்