தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;

Update:2023-08-03 21:51 IST

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 50 வயது கூலித்தொழிலாளி. கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இவர், தனது 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்